ஆர்ஆர்ஆர் படம் குறித்து ரசூல் பூக்குட்டி சர்ச்சை..!! விளக்கம் கேட்ட தயாரிப்பாளர்..!!

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என் டி ஆர் நடித்த படம் ஆர்ஆர்ஆர் பான் இந்தியா சினிமாவாக வெளியானது. கடந்த மார்ச் 24ம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் பல கோடி வசூலை குவித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், முனிஷ் பரத்வாஜ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஆர்ஆர்ஆர்’ என்ற குப்பை படத்தை 30 நிமிடங்கள் வரை பார்த்தேன் என பதிவிட்டிருந்தார்.இதற்கு பிரபல ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, தன்பாலின ஈர்ப்பாளர்கள் கதை என பதிலளித்திருந்தார். இவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், ஆலியாபட் படத்தில் பிராப்பர்ட்டி போல பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனவும் குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்துக்கு ‘ஆர்ஆர்ஆர்’ பட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ரசூல் பூக்குட்டியின் கருத்தை ட்விட்டரில் மேற்கொள்காட்டி கருத்தை பதிவிட்டுள்ள பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா, ”ஆர்ஆர்ஆர்’ தன்பாலின ஈர்ப்பாளர் பற்றிய படம் என நான் நினைக்கவில்லை என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ரசூல் பூக்குட்டி, இதனை முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். அப்படியே இருந்தாலும் அது தவறில்லைதான். நான் என் நண்பருக்கு பதிலளித்தேன். இதை நீங்கள் கவலைக்குரியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் யாரையும் புண்படுத்துவதற்காக இதைத் தெரிவிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.