கமல், விஜய் சாதனையை முறியடித்த ‘கடைசி விவசாயி’ – உலகளவில் 2வது இடம்!!

2022-ஆம் ஆண்டு வெளியான சிறந்த படங்கள் பட்டியலில் கடைசி விவசாயி படத்திற்கு இரண்டாம் இடத்தை சர்வதேச நிறுவனம் வழங்கியுள்ளது.
சர்வதேச படங்கள் குறித்து விமர்சனங்கள். சிறந்த படங்களின் தரவரிசை வெளியிடும் “LETTERBOXD” நிறுவனம், 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் சர்வதேச அளவில் வெளியான சிறந்த 25 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி படத்திற்கு இரண்டாம் இடத்தை கொடுத்து அந்த நிறுவனம் கவுரவித்துள்ளது. இதனால் அப்படத்தில் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே ராஜமவுலியின் RRR படம் 6வது இடத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல்
லோகேஷ் கனகராய் இயக்கத்தில் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வரும் விக்ரம் படமானது 11வது இடத்தை பெற்றுள்ளது.
மேலும், மலையாள படமான PADA 21வது இடத்தையும் பிடித்துள்ளன. கடைசி விவசாயி படம் இரண்டாம் இடம் பிடித்ததை சுட்டிக்காட்டி ரசிகர்கள் இயக்குநர் மணிகண்டன், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.