ஆதித்ய கரிகாலனாக அவதாரம் எடுத்த விக்ரம்: வைரலாகும் சர்ப்ரைஸ் போஸ்டர்!!

மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். .

ரவி வர்மன் ஒளிப்பதிவில் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் தமிழில் வெளியிடுவதற்கான உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.

ஏற்கனவே கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோரது தோற்றங்களுடன் கூடிய தனித்தனி போஸ்டர்களால் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் சோழப் பட்டத்து இளவரசரை வரவேற்கிறோம் என்றும் கடுமையான போர்வீரன், காட்டுப் புலி, ஆதித்த கரிகாலன் என்ற வாசகத்துடன் நடிகர் விக்ரமின் போஸ்ட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த விக்ரமின் ரசிகர்கள் போஸ்டர் பர்ஸ்ட் லுக்கை விட சூப்பராக இருப்பதாக கமன்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.