ராக்கெட்ரி நம்பி விளைவு: இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தை கொடுத்ததற்காக நன்றிகள் என நடிகர் மாதவனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.இப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ராக்கெட்ரி திரைப்படம் – அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் – குறிப்பாக இளைஞர்கள்.
நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் நம்பி நாராயணன் அவர்களின் வரலாற்றை மிக தத்ரூபமாக நடித்து படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையான தானும் நிரூபித்திருக்கிறார் என வாழ்த்தியுள்ளார்.
இஸ்ரோவின் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’. இந்தப் படத்தை நடிகர் மாதவன் நடித்து இயக்கியுள்ளார். இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கில் நம்பி நாராயணன் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தும் கதையாக உருவாகியுள்ள படம் ராக்கெட்ரி நம்பி விளைவு.

ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுக்களும் என்று ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்