காளி ஆவணப்படத்தின் போஸ்டருக்கு கிளம்பும் எதிர்ப்புகள்..!!

இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கிய காளி என்கிற ஆவணப்படத்தின் போஸ்டர் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆவண படமான காளி போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இயக்குனர் லீனா மணிமேகலை மீது டெல்லி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்துக்களின் கடவுளான மகா காளி, சிகரெட் புகைப்பது போன்றும், ஒரு கையில் எல்ஜிபிடி கொடியை ஏந்திய படியும் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இந்து கடவுளை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதை எதிர்த்து லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் இயக்குனர் லீனா மணிமேகலை தனது புதிய ஆவண படமான ‘காளி’ தொடர்பான சர்ச்சைக்குரிய போஸ்டர் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.

காளி போஸ்டரையும் ஆவண படத்தையும் தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் லீனா மணிமேகலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *