நடிகை சித்ராவின் வழக்கில் திடீர் திருப்பம்! சிக்குவாரா ஹேம்நாத்?

ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்ய கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நிலுவையில் இருக்க கூடிய நிலையில் நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் உயிரிழந்த சித்ராவின் முகத்தில் காயங்கள் இருந்ததாகவும் இதற்கு ஹேம்நாத் தான் காரணம் என்று சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சீரியலில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என்று துன்புறுத்தியதாகவும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சித்ராவிற்கு ஹேம்நாத் சித்ராவிற்கு தொல்லை கொடுத்ததாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், சித்ரா இல்லாத சமயத்தில் ஹேம்நாத் பெண் தோழிகளை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் ஹேமநாத்திற்கு எதிராக போதுமான அளவு ஆதாரம் இருப்பதனால் நிலுவையில் இருக்கக்கூடிய வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஹேமநாத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.