படப்பிடிப்பில் பரபரப்பு..!!  லத்தி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷாலுக்கு விபத்து..!!

இயக்குனர் வினோத் குமார் இயங்கும் லத்தி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரமே வாகை சூடும் படத்துக்கு பிறகு லத்தி படத்தில் விஷால் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். 

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விஷால் போலீசாக நடித்து வரும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது நடிகர் விஷாலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நூறு ரவுடிகள் சேர்ந்து விஷாலை தாக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது, அவருக்கு நிஜமாகவே காலில் பலத்த அடிபட்டது.

லத்தி' படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு எலும்பு முறிவு - வீடியோ  வெளியீடு - Vishal- Laththi- லத்தி- விஷாலுக்கு எலும்பு முறிவு ...

அவரால் நிற்க முடியாத நிலையில் உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *