சூப்பர் மார்க்கெட்டில் நடிகர் அஜித் குமார்..!! கொண்டாடும் ரசிகர்கள்..!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிறிது ஓய்வுவிற்காக  ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பி.எம்.டபுள்யூ பைக்கில் வலம் வரும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. லண்டனில் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் செல்லும் அஜித் தன்னுடைய கார்டை கொடுத்து பணம் செலுத்துகிறார்.

அஜித்தை அடையாளம் காணும் அந்த கடை கேஷியர் அஜித்துக்கு கைகொடுத்து நலம் விசாரிக்கிறார். பின்னர் அஜித் திருப்பி நடக்க பார்க்கிறார். அப்போது எதிரே வந்த பெண்ணுக்கு இடைஞ்சலாக இருந்துவிட்டதாக நினைத்து சாரி கேட்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுபோன்ற அஜித்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள் வெளியாகி வருவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அஜித்தை முன்பெல்லாம் பொது இடங்களில், வெளி நிகழ்விகளிலோ பார்ப்பது என்பது அரிதிலும் அரிதாகவே காணப்பட்டது. ஆனால்  வலிமை படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   

Leave a Reply

Your email address will not be published.