இந்த பாடலை பாடியது உங்கள் விஜய்..!! வாரிசு படம் குறித்து புதிய அப்டேட் இதோ..!!

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்து என படம் குறித்து என தகவல் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தில் வரும் ஒரு பாடலை விஜய் பாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Barath Vijay (@BarathSammu) / Twitter

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதே போல பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி சென்டிமென்ட் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. வாரிசு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக செல்லும் நிலையில் இந்த படம் 2023 பொங்கல் அன்று வெளியாக உள்ளது.

Cinema Express on Twitter: "Vanganna Vanakkanganna (#Thalaivaa) - A  callback to his early singing days, this track by @gvprakash is vintage  #Vijay. The actor makes even the quintessential #Tasmac number his own. #

தற்போது வாரிசு திரைப்படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு வெளியான விஜய் படங்களை போலவே இந்த படத்திலும் விஜய் ஒரு பாடல் பாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேக் பாடல் வரிகள் எழுத உள்ளார். தற்போது இந்த புதிய அப்டேட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 

Leave a Reply

Your email address will not be published.