கார்கி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு..!!

இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் கார்கி. நடிகை சாய் பல்லவி நடித்துள்ள கார்கி திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அநீதிக்கு எதிராக போராடும் ஒரு பெண்மணியின் போராட்டத்தை அடிப்படையாக கொண்ட கதையம்சம் கொண்ட இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. 

ஏற்கனவே இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. 

சாய்பல்லவியின் கார்கி படத்தை வழங்கும் சூர்யா, ஜோதிகா!!

அதன்படி ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார்.

சில தினங்களுக்கு முன் ரசிகர்கள் அவருக்கு லேடி பவர் ஸ்டார் கொடுத்தனர் அதற்கு அவர்  என் பெயருக்கு முன் லேடி பவர் ஸ்டார் என்று பட்டம் வேண்டாம். இப்படி பட்டம் வைத்துக் கொள்வது எனக்கு பிடிக்காது. 

இது போன்ற பட்டங்களுக்கு நான் ஈர்ப்பு ஆக மாட்டேன். ரசிகர்கள் அன்பினால் வளர்ந்தேன். அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என மட்டுமே ஆசைப்படுகிறேன் என கூறியிருந்தார். 

Leave a Reply

Your email address will not be published.