ரசிகர்கள் உற்சாகம்..!! கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி துபாய் அரசு..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா வழங்கி துபாய் அரசு கவுரவித்துள்ளது. இத்தனை வருடங்கள் கமல்ஹாசன் திரைப்படங்களில் நடித்ததற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போது சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது உள்ளது.இத்திரைப்படத்தில் கமலஹாசனுக்கு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து உள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக நாடான துபாய்க்கு செல்ல கமல்ஹாசனுக்கு சிறப்பு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் தென்னிந்தியாவில் முதல் முறையாக நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விசாவை பெற்றிருந்தார்.
அவரை தொடர்ந்து நடிகைகள் அமலாபால், காஜல் அகர்வால், பார்த்திபன், நாசர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. இந்த கோல்டன் விசாவின் மூலம் கமல்ஹாசன் அடுத்த 10 வருடங்களில் எப்போது வேண்டுமானாலும் துபாய்க்கு செல்லும் வசதி வந்துள்ளது. அதேபோல் அங்கு எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கும் வசதி உள்ளது.
ஏற்கனவே விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக துபாயில் அமைந்துள்ள மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் வெளிப்புறத்தில் விக்ரம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இதுவே தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் பூர்ஜ் கலிஃபா வில் ஒளிபரப்பப்பட்ட முதல் ட்ரைலர் என்ற பெருமையை விக்ரம் திரைப்படம் பெற்றுள்ளது.