நடிகர் சூர்யாவிற்கு அடித்த ’ஜாக்பாட்’… குஷியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் மாற்றான், உன்னை நினைத்தே, பிரண்ட்ஸ், சூரரை போற்று ஜெய்பீம் போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் மொழியை தவிர பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இந்த சூழலில் நடிகர் சூர்யாவிற்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. அதாவது அமெரிக்காவில் வழங்கப்படும் அகடாமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது உலகப்புகழ் பெற்ற விருதுகளில் ஒன்றாகும்.

தற்போது நடிகர் சூர்யாவிற்கு ஆஸ்கர் அகாடமியில் உள்ள 397 உறுப்பினர்களில் உறுப்பினராக சேர்வதற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்மூலம் ஆஸ்கர் அகாடமியில் இணையும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். இந்த தகவலால் அவருடைய ரசிகர்கள் நடிகர் சூர்யாவுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், பாலிவுட் நடிகை கஜோல் இன் பெயரும் ஆஸ்கர் உறுப்பினரின் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்கர் அகடமியில் ஏ.ஆர் ரகுமானுக்கு அடுத்ததாக இணையும் இரண்டாவது தமிழ் பிரபலம் நடிகர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *