அடுத்த அதிர்ச்சி!! பிரபல காமெடி நடிகர் கவலைக்கிடம்…

சினிமா துறையை பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாகவே திரைப்பிரபலங்கள் உயிரிழப்பது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று போன்ற படங்களில் நடித்த பூ ராமுவின் மறைவானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதே போல இன்றைய தினத்தில் பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது 25 ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் காமெடி நடிகராக இருந்தவர் வெங்கல்ராவ். இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த வெங்கல்ராவ் திடீரென ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் துணை நகைசுவை நடிகராக நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *