விஞ்ஞானி நம்பி நாராயணன் கெட்டப்பில் மாதவன்..!! வியந்து பார்த்த சூர்யா..!!

நடிகர் மாதவன் தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட். மிகப்பெரிய சர்ச்சை மற்றும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூலை 1ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பித்தக்கது. ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படம் ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தில் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும், விண்வெளிப் பொறியாளரான நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து நடித்துள்ளார் மாதவன்.  

நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஷூட்டிங் தளத்திற்கு சென்ற நடிகர் சூர்யா விஞ்ஞானி நம்பி நாராயணன் போன்ற  கெட்டப்பில் இருந்த மாதவனை பார்த்து வியத்துள்ளார். நடிகர் மாதவன் தற்போது அவருடைய சமூக வலைதள பக்கத்தில் அந்த காட்சியை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *