யானை படம் வெற்றியடைய யாரும் எதிர்பார்க்காத இடத்திற்கு சென்ற நடிகர் அருண் விஜய்..!!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்த யானை ஜூலை 1-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் மலேசியா முருகன் கோவிலில் யானை படம் வெற்றி அடைய சாமி தரிசனம் செய்துள்ளார். இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கிராமத்துக் கதைக்களத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில்  ராதிகா, யோகிபாபு, கே.ஜி.எப். பட வில்லன் ராமச்சந்திர ராஜு, தலைவாசல் விஜய், ராஜேஷ், இமான் அண்ணாச்சி, ‘குக் வித் கோமாளி’ புகழ், அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில்  அருண் விஜய் படத்தை தீவிரமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார். 

அதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் அருண் விஜய் சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக மலேசியா சென்றுள்ளார். 

அங்குள்ள பிரபல முருகன் கோவில் படம் வெற்றி பெறவேண்டி சாமி தரிசனம் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *