விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்த நடிகர் மாதவன்..!!

நடிகர் மாதவன் சென்னையில் ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது அமெரிக்கா, நாசா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பல முறை 800, 900 மில்லியன் என கோடிக்கணக்கில் செலவழித்து தான் செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெற்றார்கள். 

அதிநவீன இன்ஜின் தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் இந்த வெற்றியைப் பெற்றனர். ஆனால் இந்தியாவிடம் இருக்கும் இன்ஜின் மிகவும் சிறியது. அவர்களது விண்கலம் செல்லும் தூரத்தை விட குறைவாகத்தான் செல்லும்.

அப்படியிருக்கும்போது இந்தியா கடந்த 2014-ம் ஆண்டு செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பியது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்தும்போது, 1000 வருடங்களுக்கு முன்பே கணித்து வைத்து செலஸ்டியல் என்ற பஞ்சாங்கம் மூலம் துல்லியமாக மற்ற கிரகங்களை எல்லாம் தட்டிவிட்டுட்டு நேரடியாக அனுப்பினார்கள். 

பஞ்சாங்கம் வானியல் வழிமுறை வரைபடத்தைப் பார்த்து ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மைக்ரோ செகண்ட்டில் செவ்வாய்க்கு இஸ்ரோ செயற்கைக்கோளை அனுப்பினார்கள் . அது வெற்றிகரமாக தனது வேலையை செய்தது. மின்சாரம் இல்லாமல், சின்ன பட்ஜெட்டில் செயற்கைகோள் அனுப்பப்படுவதற்கு காரணம் இந்த பஞ்சாங்கம் தான் என்று தெரிவித்திருந்தார்.

மாதவனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதுகுறித்து அவர் தனது பதிவில், அல்மனாக்கை தமிழில் பஞ்சாங்கம் என்று அழைத்த நான் விமர்சனங்களுக்கு தகுதியானவர்தான். தனது அறியாமையை உணர்கிறேன் என குறிப்பிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *