திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!!
இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இதை தயாரித்துள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான தாய்க்கிழவி வெளியானது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் காம்போவில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.நடிகர்கள் தனுஷ், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இதில் நடித்துள்ளேன். வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி இந்தப் படம் வெள்ளித்திரையில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள தாய்க்கிழவி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இந்தப் பாடலை எழுதி பாடியும் உள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
தாய்க்கிழவி எனும் இந்தச் சொல் நாட்டாமை படத்தில் வில்லனாக நடித்த பொன்னம்பலம் அதில் அடிக்கடி சொல்லி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் படம் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்பட்ட நிலையில் இப்போது ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.