அச்சச்சோ..! ஹனிமூன் சென்ற நயன்தாராவுக்கு என்ன ஆச்சு… ரசிகர்கள் ஷாக்..
தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ரிசார்ட்டில் கோலாகலமாக நடைப்பெற்றது.
குறிப்பாக கோலிவுட், ஹாலிவுட் சினிமா துறையை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு கோலாகலமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அவர்கள் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு பாலிவுட், கோலிவுட்டில் முக்கிய நட்சத்திரங்கள் ஷாருக்கான், ரஜினி, கமல் போன்றவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் திருமணம் முடிந்த அடுத்த நாளே கோவில் தலங்களுக்குச் சென்று வரும் விக்கி – நயன் சமீபத்தில் மாமியார் வீடான கேரளாவிற்கு சென்று தடபுடல் விருந்து நடந்தது. இந்த சூழலில் தங்களது தேனிலவை தாய்லாந்தில் கொண்ட்டாட சென்றுள்ளனர்.
இந்த சூழலில் தாய்லாந்தில் இருக்கும் நயன்தாரா எதற்காகவோ காத்துக்கொண்டிருக்கும் சோகமான படத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு சோகமாக இருக்கும் இந்த ரியாக்சன் கூட செமதான் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.