என்ன சொல்றீங்க..! ரசிகர்களுக்கு ராஷ்மிகாவை பிடிக்க இதுதான் காரணமா?
கீதா கோவிந்தம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இதனால் பல இளைஞர்களுக்கு அவர் மீது கிரஷ் இருப்பது தனிகதைதான். தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.
இந்நிலையில் அண்மையில் வெளிவந்த புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா ஏ சாமி ஏ சாமி என்ற என்ற பாடல் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிப்போனார்.
தளபதியின் தீவிர ரசிகராக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தளபதின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் ராஷ்மிகா பொது இடங்களிலும் சரி படப்பிடிப்பு தளங்களிலும் சரி எப்போதும் அனைவருடனும் சகஜமாக பழகுவாராம்.
குறிப்பாக தென்னிந்திய திரையுலகில் டாப் ஹீரோயினாக இருக்கும் ராஷ்மிகா அனைவரிடமும் தன்னடக்கத்துடன் தான் நடந்து கொள்வாராம். இதனிடையே சற்றும் தலைக்கனம் இல்லாமல் இருப்பதால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப்பிடித்தார்.
நடிகை ராஷ்மிகா பேருக்கு சோசியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ராஷ்மிகாவிடம் செல்பி எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டாள் தயங்காமல் எடுத்துக் கொள்வாராம். அதோடு தன்னை சுற்றி உள்ள அனைவரும் சந்தோசமாக இருக்க நினைபாராம் நடிகை ராஷ்மிகா.