அடி தூள்!! மாஸாக வெளியானது விஜய் 66ன் இரண்டாவது லுக் போஸ்டர் …

விஜய் நடித்திருக்கும் 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அதிகாரப்பூர்வமான தகவலை தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் நேற்று மாலை 6.01 மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்திற்கு வாரிசு என பெயரிடப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் இப்படத்தை வில் ராஜூ தயாரிக்கவுள்ளார். பிரபல இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். நடிகை ராஸ்மிகா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாகியிருக்கும் இந்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படத்தின் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வாரிசு என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இதனிடையே அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படக்குழுவினர் விஜய் 66ன் இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்தும் லைக்குகளை குவித்து வருவது வாரிசு படத்தின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *