தீபாவளிக்கு களமிறக்கும் சிவகார்த்திகேயன் திரைப்படம்..!! 

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம்  தீபாவளிக்கு  வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பிரின்ஸ்.

இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகவிருக்கும் பிரன்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளனர் படக்குழு.

அதில் தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிடுவதாக  சிவகார்த்திகேயன், சத்யராஜ், நடிகை மரியா மற்றும் இயக்குனர் ஆகியோர் கலந்துரையாடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளனர்.

நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. தீபாவளிக்கு அஜித் குமார் நடிக்கும் ஏகே 61, கார்த்தியின் சர்தார், ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அந்த வரிசையில் தற்போது  சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் இணைத்துள்ளது.

டாக்டர், டான் படங்களின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படம்  ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *