அனிமேஷன் படத்திற்கு பல நாடுகளில் தடை.. !! காட்சிகளை நீக்க மறுக்கும் டிஸ்னி நிறுவனம்..!!

தி டிஸ்னி பிக்சர் பிலிம் நிறுவனம் தயாரித்த லைட் இயர் என்ற படம் நேற்று (ஜூன் 17) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில் படத்தில் வரும் ஹீரோ இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது.

லிப் லாக் என்னும் முத்தக் காட்சிகள் மற்றும் தன்பாலின முத்தக் காட்சிகள் இடம் பெற்றதால் இந்த படத்தை குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதல்ல என எகிப்து, மலேசியா சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்த படத்தை  தடை செய்துள்ளது.

டிஸ்னி மற்றும் பிக்ஸார் நிறுவனங்களின் அனிமேஷன் திரைப்படங்கள் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. டிஸ்னி நிறுவனம் தயாரிப்பில் வெளியான டாய் ஸ்டோரி திரைப்படம் உலகளவில் மிகவும் பிரபலமான அனிமேஷன் திரைப்படம்.

Malaysia: Disney refused to cut gay scenes in 'Lightyear' | Daily Mail  Online

இந்தக் கதையில் வரும் கதாபாத்திரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் உள்ளது . தற்போது இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து லைட் இயர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தை பல நாடுகள் தடை செய்துள்ளது. பல நாடுகள் தடை விதித்த நிலையில்  டிஸ்னி தாங்கள் காண்பித்துள்ள கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவிக்கும் வகையில் இருப்பதால் படத்தில் இருந்து அந்தக் காட்சிகளை நீக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *