கேரளாவில் மறுவீடு! கொச்சி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்த விக்கி-நயன்..

பாலிவுட் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவன் மீது காதல் மலர்ந்தது. பின்னர் தமிழ் சினிமாவில் 7 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வருபவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை மாகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் உறவினர்கள், நண்பர்கள், திரை நட்சத்திரங்கள் படைசூழ கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு பாலிவுட் நடிகர் ஷாருக் கான், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கார்த்திக் போன்ற முக்கிய திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

ஏற்கனவே கூறியபடி இவர்களின் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்ற நிலையில் திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதிக்கு சென்று சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவர்கள் கடிதம் வாயிலாக மன்னிப்பு கேட்டனர். இந்த சூழலில் திருமணம் முடிந்த கையோடு, மறுவீடு கொண்டாட்டத்திற்காக விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றுள்ள நயன், தினமும் கேரளாவை சுற்றியுள்ள கோயில்களுகு தம்பதியராக சென்று வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *