இன்று காலை 8.30 மணிக்கு விக்கி – நயன் திருமணம்!!

நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் மாமல்லபுரத்தில் இன்று திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக மெஹந்தி விழாவும் தொடங்கியது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் நடைபெற உள்ளது.

பாலிவுட்டில் கரீனாவுக்கு ஆடை வடிவமைக்கும் குழுவினர் திருமண ஜோடிக்கு தேவையான ஆடை அலங்காரங்களை செய்கின்றனர். திருமணத்தையொட்டி மெஹந்தி விழா நேற்று தொடங்கியது. நட்சத்திர ஜோடியின் இந்த திருமண நிகழ்ச்சியை திரைப்படம் போல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இயக்குனர் கெளதம் வாசுதேவன் மேனன் இதனை இயக்க உள்ளார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் பேட்டியுடன் இந்த வீடியோ தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமண வீடியோ நெட்பிலிக்ஸ்ஸின் வெளியாக உள்ளது. இதற்காக ரூ. 2 கோடி முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் தற்போது இன்று காலை 8:30 நடைப்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமணத்திற்கு அழைப்பு விடுபவர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்களது திருமணத்திற்கு கமல், ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னிணி நடிகர்களும் முக்கிய அரசியல் தலைவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *