OTT-ல் வெளியாகிறது விக்கி – நயன் திருமண வீடியோ?
நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் மாமல்லபுரத்தில் நாளை திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று மெஹந்தி விழா தொடங்கியது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணமானத்திற்கு மிக நெருங்கிய நண்பர்கள், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் முக்கிய திரைப்பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் கரீனாவுக்கு ஆடை வடிவமைக்கும் குழுவினர் திருமண ஜோடிக்கு தேவையான ஆடை அலங்காரங்களை செய்கின்றனர். திருமணத்தையொட்டி மெஹந்தி விழா நேற்று தொடங்கியது. நட்சத்திர ஜோடியின் இந்த திருமண நிகழ்ச்சியை திரைப்படம் போல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இயக்குனர் கெளதம் வாசுதேவன் மேனன் இதனை இயக்க உள்ளார்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் பேட்டியுடன் இந்த வீடியோ தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமண வீடியோ நெட்பிலிக்ஸ்ஸின் வெளியாக உள்ளது. இதற்காக ரூ. 2 கோடி முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்து ஜூன் 11-ஆம் தேதி செய்தியாளர்களை சந்திக்க நயன்தாரா திட்டமிட்டுள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக காதல் ஜோடியாக வலம் வரும் இவர்கள் திருமண வாழ்கையில் இணைவதால் இவர்களுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.