கமல் செய்த செயல்! அதிர்ச்சியில் உறைந்த லோகேஷ் கனகராஜ்..
சினிமா துறையை பொருத்தவரையில் புதுமுக இயக்குனர்கள் வெற்றிப்படங்களை தருவது என்பது கடினம். ஆனால் தொடர்ச்சியாக 3 படங்களில் ஹிட் கொடுத்து வெற்றிப்படங்களை இயக்கிவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ் தற்போது விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி போன்ற நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்த நிலையில் கடைசி 3 நிமிடத்தில் வந்த சூர்யாவின் காட்சிகளானது திரையரங்கை அதிரவைத்தது. இந்த படத்தின் வசூலானது தற்போது வரையில் உலக அளவில் சுமார் 150 கோடையை தொட்ட நிலையில் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில் கமலின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ் என்ற விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த சூழலில் படத்தின் வெற்றியினால் லோகேஷ் கனகராஜ்க்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக கடிதம் எழுதியிருந்தது சோசியல் மீடியாவில் வைரலாகி பரவி வந்தது. இதற்கிடையில் தற்போது அதிற்கும் ஒரு படி மேலாக சென்று கமல்ஹாசன் , லோகேஷ் கனகராஜ்-க்கு கார் பரிசாக வழங்கியுள்ளார். இதனால் இயக்குனர் லோகேஷ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.