ஹனிமூனை தள்ளிப்போடும் நயன்தாரா: காரணம் தெரியுமா?

கோலிவுட் திரையுலகில் பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இந்த ஜோடி பல்வேறு கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் திருப்பதியில் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு அனுமதி கொடுக்காததால் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ரிசார்ட்டில் நடைப்பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா சினிமாவில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் இவர் மீண்டும் என்ட்ரி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் திருமணம் முடிந்த பிறகு 6 மாதம் வரையில் ஹனிமூன் கிடையாது என தகவல்கள் வெளியான நிலையில் இதற்கு பல்வேறு கருத்துக்கள் சோசியல் மீடியாவில் உலாவருகிறது.

அந்த வகையில் நடிகை நயன்தார அடிக்கடி கருத்தடை செய்துள்ளதால் இவருடைய கர்ப்பப்பை பலவீனமாக இருப்பதாக இதனால் திருமணத்துக்கு பின்பு குழந்தை பெற்று கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் திருமணம் முடிந்த பிறகு கேரளாவில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பாக அவர் ஆறு மாதம் அங்கே தங்கி சிகிச்சை பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *