தளபதி 66 படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது!
தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பல்லி இயக்கத்தில் #Thalapathy66 படத்தில் நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதிலும் தளபதி-66 திரைப்படம் ஒரு காதல் திரைப்படமாக இருக்கும். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார்.
சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சிறப்பாக ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இதில் சரத்குமார், மற்றும் நடிகர் மோகன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதிலும் சரத்குமார் தளபதி விஜயின் தந்தையாக நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது. அதை தொடர்ந்து தளபதியின் தம்பியாக நடிகர் ஷியாம் நடிக்க உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடிகர் சரத்குமார், ஆகஸ்ட் மாதம் வரை தளபதி 66 திரைப்பட ஷூட்டிங் நடைபெறும் என்று கூறி இருந்தார். தற்போது மீண்டும் ஒரு அப்டேட்டை சரத்குமார் கூறியுள்ளார். அதாவது ஹைதராபாத்தில் நடைபெற்ற #thalapathy66 25 நாட்கள் ஷூட்டிங் முடித்து வீடுதிரும்பினேன் என்று கூறியுள்ளார். தளபதி66 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.