தர்ஷனா பாடலின் புதிய சாதனை!

வினீத் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில், அப்துல் வஹாப் இசையில் பிரணவ் மோகன்லால் கதாநாயகனாக நடித்து, கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வெளியான திரைப்படம் ‘ஹிருதயம்’. இவர்களுடன் இணைந்து தர்ஷனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கல்லூரி காலத்து கதையானதால் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற அணைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவந்தது. குறிப்பாக ‘தர்ஷனா’ மாற்று ‘ஒனக்க முந்திரி’ பாடல்கள் தென்னிந்திய முழுவதும் வைரலானது.

தற்போது இந்த படத்தில் இடம் பெற்ற ‘தர்ஷனா’ பாடல் புதிய சாதனையை பெற்றுள்ளது. மலையாள சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக யூடியூபில் 10 லட்சம் லைக்குகளை குவித்த பாடல் என்ற பெருமைக்குள்ளாகியுள்ளது ‘தர்ஷனா’ பாடல். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருவதோடு அனைவரும் படத்தின் இயக்குனருக்கும், இசையமைப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.