ஷாருகான் மகன் நிரபராதி, போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அறிக்கை!

பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகரான ஷாருக்கானின் மகன் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் வழக்கில் கைதான டெல்லி ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் சிறையில் மற்ற கைதிகள் போல்தான் நடத்தப்பட்டு வந்தார் எனவும் தெரிவித்தனர்.

மேலும் ஆரியன் கானுக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரது ஜாமீன் மனு மீது மீண்டும் விசாரணை நடை பெற்றது. அப்போது ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ஜாமீன் வழக்கு நீதிமன்றத்தில் வந்தது. வழக்கில் தீர்ப்பு ஆர்யன் கானுக்கு எதிராக இருந்தது. இதனால் ஆரியன் தரப்பில் இருந்து போடப்பட்ட ஜாமின் வழங்க கோரிய மனுவுக்கு நீதிபதி ஜாமீன் வழங்க முடியாது என தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை போதைப்பொருள் தடுப்பு போலீசார் தாக்கல் செய்தனர். அதில், போதைப்பொருள் வைத்திருந்ததற்காக என்டிபிஎஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆர்யன் கான் உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யா கான் ஜாமீன் கேட்ட போது அவர் வெளியில் சென்றால் சாட்சியை கலைத்துவிடுவார், அவர் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் என, என்.சி.பி ஆர்யா கானின் வாட்ஸ் அப் தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில், ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரமில்லை என என்.சி.பி அறிக்கை வெளியிட்டுள்ளதால் பெரும்பரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *