“இரத்தமும் சதையும்” திரைப்படத்தின் First Look
நடிகர் சிவாஜியின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, பல படங்களில் நடித்தும் பெரிதும் பேசப்படாத நடிகராகவே தமிழ் சினிமாவில் வளம்வருகிறார். இவர் இவன் வேற மாதிரி, கும்கி, அரிமா நம்பி, சிகரம் தொடு போன்ற பல படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘டாணாக்காரன்’ திரைப்படம் பெரிதும் பேசப்பட்டது. இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.
தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இரு மாதங்களுக்கு முன்பு புதிதாக ஒரு படத்தில் நடிக்க துவங்கினார். இந்த திரைப்படத்திற்கு ‘டைகர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் கார்த்தி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். தற்போது விக்ரம் பிரபு நடித்து வரும் ‘இரத்தமமும் சதையும்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
‘இரத்தமமும் சதையும்’ படத்தை கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர். தற்போது இந்த படத்தின் முதல் லுக் வெளியாகி உள்ளது. போஸ்டரை சிவப்பு நிறத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.