பொது இடத்தில் கொஞ்சி விளையாடும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்!

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன் கடின உழைப்பால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து பல வருடங்களாக #LadySuperStar பட்டத்தை தக்கவைத்து இருக்கிறார் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார். தற்போது இந்தியிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நானும் ராவ்டிதான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகிறார்கள். விரைவில் இவர்கள் திருமணம் நடைபெறும் என்று பல செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வழுத்தூர் கிராமத்தில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சென்றிருந்தார். அங்கு அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு நடத்தினார்.

இந்த கோவில் விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவில் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து பல நாட்களாக கோவில் கோவிலாக சென்று வருகிறாரகள் இவர்கள் இருவரும். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோட்டோர கடையில் காதலி நயன்தாராவுக்கு அசைவ உணவை ஊட்டி விடும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையம் முழுவதும் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *