அக்டோபர் இறுதியில் #AK62 ஷூட்டிங்?

நடிகர் சிம்புவின் ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். பிறகு நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். தற்போது கடைசியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் குமாரின் 62 வது திரைப்படத்தை இயக்க உள்ளார். அஜித் குமார் கடைசியாக போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘வலிமை’ படத்தில் நடித்து இருந்தார். அஜித்தின் 61-வது படத்தை எச். வினோத்தே இயக்குகிறார். #AK61-ல் அஜித் இரு வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் #AK62 படத்தை இயக்குவது பற்றி கூறி இருக்கிறார். வாலி மற்றும் மங்காத்தா படத்தில் அஜித் குமாரின் நடிப்பு மிகவும் பிடித்து இருந்தது என்றும் கூறி இருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் 62-வது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் இறுதியில் துவங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *