விக்ரம் திரைப்படத்தின் நீளம் பற்றிய தகவல் வெளியானது!

மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள திரைப்படம் விக்ரம். இதில் உலக நாயகன் கமல் ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்தை கமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலமாக தயாரித்து வருகிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில்தான் ‘விக்ரம்’ படத்திம் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்தது. மேலும் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

வருகிற ஜூன் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் ‘விக்ரம் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது விக்ரம் படத்தின் நீளம் 2 மணி நேரம் 53 நிமிடங்கல் என்ற புதிய அறிவிப்பையும் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.