விருது வழங்கும் விழாவில் விஜயை பற்றி கூறிய லோகேஷ்!
தளபதி நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பீஸ்ட்’. ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘பீஸ்ட்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் வீமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. மேலும், வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது.
தற்போது ‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு தளபதி-66 படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிவருகிறார். தளபதி-66 படம் காதல் கதையாக இருக்கும் என்றும் கூறி இருந்தார். இந்த படத்தில் ராஸ்மிகா, சரத் குமார், மோகன், ஷியாம் போன்ற பலர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு பணிகளும் தற்போது துவங்கி உள்ளது.
தளபதி-66 படத்தின் பணிகள் துவங்கி உள்ள இந்த நிலையில் தளபதி-67 படத்தை பற்றிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. தளபதி-67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதை உறுதி படுத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் விஜய்யுடன் அடுத்த படம் பண்ணுவதாக தெரிவித்தார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விக்ரம் படம் வெளியான பின்னர் அறிவிக்கப்படும் என்ற அப்டேட்டையும் கொடுத்தார் லோகேஷ்.