36-வருட ஒற்றுமையில் கமல்ஹாசன்-டாம் குருஸ்!
1986-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தில் கமலஹாசன் நடித்திருந்தார். கமலஹாசனின் சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து இருந்தது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. 36-வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘விக்ரம்’ பெயரில் படம் உருவாகி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கம் இந்த படத்தில் கமல் நடித்து இருக்கிறார். இந்த படத்தையும் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது கமல்ஹாசன் குறித்து ஸ்வாரசியாமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் 1986-ம் ஆண்டு ‘டாப் கன்’ என்ற படத்தில் நடித்தார்.
36 வருடங்களுக்கு பிறகு முந்தையா படங்களின் பெயரிலேயே கமல்ஹாசன் மற்றும் டாம் குருஸ் நடித்த புதிய படங்கள் திரைக்கு வர உள்ளன. கமல் ஹாசன் டாம் குருஸ் இடையே இந்த வித்தியாசமான ஒற்றுமை குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்