30 நிமிடமாக கண் கலங்கிய சூப்பர் ஸ்டார்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 11-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘டான்’.இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார. சிபி சக்கரவர்த்தி இயக்கிய இந்த திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, சமுத்திரகனி சூரி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார்.

‘டான்’ திரைப்படத்தின் விநியோக உரிமையை லைக்கா தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரெட் ஜியன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் உணர்வு பூர்வமான காட்சிகள் ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் ‘டான்’ படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தன் கருத்தையும் பகிர்ந்துள்ளார். ‘சூப்பர் பா….கடைசி 30 நிமிடம் என்னுடைய கண்ணீரை தடுக்க முடியல’ என படக்குழுவினருக்கு போனில் அழைத்து வாழ்த்து கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *