அரசியலுக்கு என்ட்ரி கொடுக்கும் நடிகர் விஜய் !!அதுவும் தெலுங்கானாவில்..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் ஜில்லா, விஷ்ணு, குருவி, சச்சின், போக்கிரி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

குறிப்பாக தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர் நடித்த அனைத்து படங்களும் பம்பர் ஹிட் அடித்தது. அண்மையில் இவர் நடித்த மாஸ்டர் திரைப்படமானது பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி அதுமட்டுமில்லாமல் வசூலையும் வாரி குவித்தது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படமானது பல்வேறு விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் தெறிக்க விட்டது. தற்போது நடிகர் விஜய் ’தளபதி 66’ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’தளபதி 66’படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார். ஏற்கனவே ராஷ்மிகா மந்தனாவிற்கு டிமாண்ட் அதிகம் இருக்கும் நிலையில் இப்படம் பம்பர் ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகர் விஜய் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சந்தித்து பூங்கொத்து மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவித்து உள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

எற்கனவே தமிழ்கத்தில் நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் தற்போது தெலுங்கானாவிலும் கட்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், இதற்காகத்தான் நடிகர் விஜய் முதல்வரை சந்தித்து இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் பேசுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *