ஓ.டி.டி.யில் வெளியானது கே.ஜி.எப்-2 திரைப்படம்!

இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பான் இந்தியா மூவியாக வெளியான திரைப்படம் கே.ஜி.எப்-2. இந்த திரைப்படத்தின் பாகம் ஒன்று இந்தியா முழுவதும் பிரபலமானதை தொடர்ந்து பாகம் இரண்டை பிரம்மாண்ட படமாகி வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

கே.ஜி.எப்-2 திரைப்படம் கடந்த மாதம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்தியயா முழுவதும் வெற்றிகரமாக ஓடி 1000 கோடி வசூலை எட்டி மாபெரும் சாதனை படைத்தது.

தற்போது படக்குழுவினர் கே.ஜி.எப்-3 எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் கே.ஜி.எப்.-3 பற்றி அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்க படுகிறது. தற்போது கே.ஜி.எப்-2 திரைப்படம் இன்று அமேசான் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. ரூபாய் 199 செலுத்தி பார்க்கும் வகையில் வெளியிட பட்டுள்ளது. கட்டணம் செலுத்திய பின் படத்தை 48 மணிநேரத்திற்குள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *