கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடுவர் குழுவுடன் நடிகை தீபிகா படுகோனே!

இந்தியில் பிரபல நடிகையான தீபிகா படுகோனே இந்தியாவிலே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் தீபிகா படுகோண் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலான Canes பிலிம் பெஸ்டிவலின் நடுவர் மன்றமாக தேர்வாகி இருந்தார். இந்த செய்தியினை Canes பிலிம் பெஸ்டிவல் நிறுவனம் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்து இருந்தது.

இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் தீபிகா படுகோனே பகிர்ந்து இருந்தார். அப்போது அவருக்கு பல தரப்பிலிருந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலான 75-வது Canes பிலிம் பெஸ்டிவல் இந்தாண்டு பிரான்சில் உள்ள கேன்சில் நடைபெற உள்ளது.

மே 17-ஆம் தேதி துவங்கி 28-மே 2022 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் இதியாவை சேர்ந்த நடிகை தீபிகா படுகோனே நடுவர் மான்றமாக தேர்வாகி உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது தீபிகா படுகோனே கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவர் குழுவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *