“உடற்பயிற்சி மிகவும் முக்கியம்” – நடிகர் ஆர்யா!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளம் வருபவர் நடிகர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த ‘சர்பட்டா பரம்பரை’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, அதற்கு பிறகு சமீபத்தில் வெளிவந்த ‘எனிமி’ திரைப்படத்தில் இவருடன் இணைந்து விஷாலும் நடித்து இருந்தார்.

மிக பெரிய எதிர்பார்பை உருவாக்கிய ‘எனிமி’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெறவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அடுத்ததாக நடிகர் ஆர்யா திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ,இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, நடிகை சிம்ரன் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

நடிப்பை தாண்டி நடிகர் ஆர்யா உடல் பயிற்சியில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். அதிலும் முக்கியமாக சைலிங்கில் அதிக கவனத்தை செலுத்துகிறார். தற்போது நடிகர் ஆர்யா சென்னையில் பேட்டி ஒன்றில் உடற் பயிற்சி மிகவும் முக்கியம் , சைக்கிளிங் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். இளைஞர்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு தேவை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *