ஹிந்தி திணிப்புக்கு என்ட்ரி கொடுக்கும் மகேஷ் பாபு..?
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக திகழ்வது மட்டுமில்லாமல் பெண்களுக்கு கனவு மன்மதனாக இருந்து வருகிறார்
இந்நிலையில் அன்மைக்காலமாகவே ஹிந்தி மொழி திணிப்பு குறித்து ஹிந்தி நடிகர்கள் மற்றும் பிற மொழி நடிகர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஹிந்தி மொழி படங்களில் நடிக்க மாட்டேன் என கூறியிருபது மீண்டும் ஹிந்தி திணிப்பு சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
இதனிடையே சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஹிந்தி சினிமா பொருத்தவரையில் தனக்கு போதுமான சம்பளத்தை கொடுக்க முடியாது என்றும் தன்னிடம் பல ஹிந்தி மொழி தயாரிப்பாளர்கள் படத்தில் நடிக்க அணுகியதாகவும் கூறினார்.
ஆனால் அங்கு சென்று தன்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். குறிப்பாக
தென் மாநிலங்களில் கிடைத்திருக்கும் மரியாதை தனக்கு போதுமானதாக இருப்பதாக அவர் கூறினார். இதனால்
இந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது என மகேஷ் பாபு கூறியுள்ளார்.
மேலும், மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கில் உருவாகி இருக்கும் ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.