“மகேஷ் பாபு”வின் பட விழாவில் “விஜய்”? – பரபரப்பு தகவல்!!
“சர்காரு வாரி பட்டா” என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக மகேஷ் பாபு நடிப்பது எல்லோரும் அறிந்ததே. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் “கலாவதி” பாடல் ஏற்கனவே இணையம் முழுக்க சக்கை போடு போட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் “முன் வெளியீட்டு” விழா ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் நிலையில் நடிகர் விஜய் இதில் கலந்துக் கொள்வார் என்ற செய்தி கசிந்து இருக்கிறது. “வம்சி படிப்பள்ளி” இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
மகேஷ் பாபுவும் விஜயும் நல்ல நட்பில் இருப்பவர்கள். மகேஷ் பாபுவின் படங்களை ரீமேக் செய்து தமிழில் வெற்றிக் கண்ட விஜய், அவர் அழைப்பு விடுத்த “பசுமை இந்தியா சவால் ” என்ற மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மரம் நட்டார். வம்சியும் தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குநர் என்பதாலும், மகேஷ் பாபுவை இயக்கி இருப்பதாலும், விஜய் கண்டிப்பாக இந்த விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அப்படி ஒரு நிகழ்வு நடந்தால், அது இரண்டு பேருடைய ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக இருக்கும் என்கிறார்கள்.