32 வயதில் ஜொலிக்கும் தமன்னாவின் அழகின் ரகசியம் இதுதானாம்: வெளிவந்த தகவல் !!

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோயின்கள் இருந்து வந்தாலும் 90 கிட்ஸ், 2 கே கிட்ஸ் மற்றும் பெரியவர்கள் என அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் தமன்னா. இவர் சூர்யா, அஜித், விஜய், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா பார்ப்பதற்கு 20 வயது பெண் போல பள பள வெனவும் அதிலும் குறிப்பாக மின்னும் மேனியை கொண்டுள்ளார்.

இந்தப் பேரழகியின் வயது 32 என சொன்னால் நம்ப முடியுமா. ஆனால் உண்மை இதுதான். மேக்கப் இல்லாமலும் தமன்னா மிகவும் அழகாக உள்ளார். இந்த சூழலில் இவரின் பொன் மேனியை பராமரிப்பது குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.

அந்த வகையில் உடல் எடையை மெயின்டன் பன்னுவதற்கு மிகவும் கவனம் செலுத்துவாராம். சில சமயங்களில் உடல் எடை அதிகரித்தாலும் அதற்கேற்ப எக்சசைஸ் செய்து அதனை சரிசெய்து விடுவாரம். மனதில் மகிழ்ச்சி இருப்பதற்கு பயணம் செய்வதை வழக்கமாக வைத்து இருப்பாராம்.

பீச் என்றால் தமன்னாவிற்கு மிகவும் பிடிக்குமாம். அதனால் ரிலாக்ஸ் ஆக அங்கு அடிக்கடி செல்வாராம். அதோடு டயட் மற்றும் எக்சசைஸ் இருந்தால் போதாது என்றும் உடலை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இளமையாக இருக்கலாம் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *