இன்று வெளியாகிறது ‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடல்!
![](https://thenewslite.com/wp-content/uploads/2022/05/202205061250106078_1_vendhu._L_styvpf.jpg)
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்ததுகாடு. இந்த திரைப்படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்குறார்.சித்தார்த்தா நுனி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தாமரை பாடல்கள் எழுதி உள்ளார்.
ஏற்கனவே கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் வெளிவந்த விண்ணைத் தாண்டி வருவாயா,அச்சம் என்பது மடமையடா படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் இந்தபடத்தின் பாடல்களும் பெரிய வரவேற்பை பெரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இந்த படத்தை பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இன்று மாலை 06.30 மணிக்கு ‘வெந்து தணிந்தது காடு’ படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலான ‘காலத்துக்கும் நீவேனும்’ பாடல் வெளியாக உள்ளது. இந்த செய்தியை படக்குழுவினர் அதிகார பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.