“காத்து வாக்குல ரெண்டு காதல்” கலெக்சன் எவ்ளோ??
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “விஜய் சேதுபதி”, “சமந்தா” மற்றும் “நயன்தாரா” நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான படம் தான் “காத்துவாக்குல ரெண்டு காதல்” தமிழ்நாட்டின் இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் சென்சேஷனாக இருந்த இப்படம் திரையரங்கில் ஏப்ரல் – 28 வெளியானது.
இந்த படத்தின் இசை அமைப்பாளர் அனிருத்தின் திறமையால் மூன்று பாடல்கள் பெரும் வெற்றி பெற்று இளைஞர்களிடம் “ரிப்பீட்” ஆக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒரு ஆணை இரண்டு பெண்கள் விழுந்து விழுந்து காதலிப்பது போன்று வெளியான இந்த படம், இளைஞர்களை தவறாக வழி நடத்துவதாக விமர்சனத்துக்கு உள்ளானது. இருந்தாலும் அதை மீறி வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்துடன் திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் படத்தின் நான்கு நாள் வசூல் விபரம் வெளியாகி இருக்கிறது. நான்கு நாட்களில் 22.3 கோடி வசூல் செய்துள்ளது. படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதால் படத்தின் முழு வசூல் விபரம் விரைவில் தெரிய வரும். எது எப்படியோ, படத்தின் விமர்சனங்களை தாண்டி இவ்வளவு வந்ததே பெரிது என்று முணுமுணுக்கிறார்கள் நெட்டிசென்கள்.