தெலுங்கு இயக்குனர் மின்சாரம் தாக்கி பலி!

தெலுங்கு டைரக்டர் பைடி ரமேஷ் ‘ரூல்’ என்ற தெலுங்கு படத்தை இயக்கி இருந்தார். இதில் சோனா படேல், சிவமணி உள்பட பலர் நடித்து இருந்தனர். ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார் பைடி ரமேஷ். தற்போது இவர் தனது அடுத்த படத்தை டைரக்ட் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அந்த படத்திற்கான நடிகர்-நடிகைகள் தேர்வும் நடந்து வந்தது. குடியிருப்பு மொட்டை மாடியில் பைடி ரமேஷ் துணிகளை துவைத்து காயப்போட்டு இருக்கிறார். அந்த துணிகளை எடுப்பதற்காக பைடி ரமேஷ் மொட்டை மாட்டிக்கு சென்றுள்ளார். அப்போது மழை பெய்து இருக்கிறது. பலத்த காற்றும் வீசியது.அப்போது காற்றில் சில துணிகள் அங்கிருந்து பறந்து மின்கம்பத்தில் விழுந்தன. அந்த துணிகாலை இரும்பு கம்பியில் இருந்து எடுக்க முயன்று இருக்கிறார்.

அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு 4-வது மாடியில் இருந்து கிழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பைடி ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு வயது 37. இது தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *