#Surya41 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சூர்யா. தமிழில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்கள் அஜித் மற்றும் விஜய். தற்போது இவர்களுக்கு சமமாக தனக்கென்று ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஆஸ்கார் வரை சென்றது. பல விருதுகளையும் வாங்கித்தந்தது மட்டும் இல்லாமல் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் தரமான படமாகவும் அமைந்தது.
தற்போது இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. எதிர்பார்த்த அளவிற்க்கு இந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சூர்யா தற்போது சமூக கருத்து தெறிவிக்கும் படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது இவர் பிரபல இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சுமார் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதற்க்கு முன்பு பாலா இயக்கிய ‘பிதா மகன்’ படத்தில் சூர்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வந்தது. இது சூர்யாவின் 41-வது திரைப்படமாகும். தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்யாகுமரியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் துவங்க உள்ளதாகவும் படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.