வெப் தொடர்களால் லட்சத்தில் இருந்து கோடிக்கு உயர்ந்த சம்பளம்!
வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அதிக தொடர்கள் தயாரிக்கின்றனர். முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். இந்த நிலையில், ஒரு வெப் தொடர் வெற்றியால் நடிகர் ஒருவரின் சம்பள 50 மடங்கு உயர்ந்து, திரையுலகில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த அதிர்ஷ்டக்கார நடிகரின் பெயர் ஜெயதீப் ஆலாவத். இவர் தமிழில் கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் சலீம் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஓ.டி.டி தளத்தில் வெளியான பாதலொக் என்ற வெப் தொடரில் நடிக்க, ஜெய்தீப் ரூபாய் 40 லட்சம் சம்பளமாக பெற்றார்.
இந்த தொடர் பெரிய வெற்றி பெற்றது. தொடரின் வெற்றிக்கு ஜெய்தீப் ஏற்று நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரமே காரணம் என்று பலரும் பேசினார். தற்போது இந்த தொடரின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் நடிக்க ஜெய்தீப்புக்கு ரூபாய் 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வெப் தொடரின் வெற்றியால், இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக கிடைத்து இருப்பதை பார்த்து ஜெயதீப் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய் இருக்கிறார்.