“விக்ரம்” படத்தின் ட்ரைலர் & இசை வெளியீடு எப்போது? அதிரடி அறிவிப்பு…!
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், அனிருத் இசையில், கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் “விக்ரம்” படத்தின் இறுதி கட்ட வேலைகள் முடிந்த நிலையில் படத்தின் வெளியீடு சூன் – 3 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது.
கமல் தயாரிக்க, அவர் நடித்த பழைய “விக்ரம்” படத்தின் தலைப்பே இந்த படத்திற்கும் வைக்கப்பட்டிருக்க, இது அந்த படத்தின் தொடர்ச்சி எனவும், கமல் “இள வயதாக” நடிக்க வைக்கும் தொழில்நுட்பமும் இதில் இடம் பெற்று இருப்பதாக கூறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக படத்தின் பல்வேறு அறிவிப்புகள் வெளியாக, படத்துடைய விளம்பரத்தை ஒரு படி மேலே சென்று ரயில் பெட்டிகளில் வரைந்து செயல் படுத்தினர். அந்த படத்தின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் “ரெட் ஜெயண்ட்ஸ் மூவி” கைப்பற்ற இந்த படம் வெளியாக தயாராகி உள்ளது.
இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் மே- 15 ஞாயிறு அன்று வெளியாகும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.